நாளை இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நாளை நடைபெற்ற உள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்ப்பட்ட நிலையில், நாளைய போட்டிக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேவேளையில், நாளைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 200_வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். 200_வது போட்டியில் விளையாடும் 14_வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார். அதேபோல சர்வதேச அளவில் 79_வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இவரை கிரிக்கெட் ரசிகர்கள் ‘ஹிட்மேன்’ என்று அன்போடு அழைக்கின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா அறிமுகமானார். இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2013 ஆம் ஆண்டிலிருந்து துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார். தொடக்க வீரராக களம் இறங்கியதை அடுத்து தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்று முறை இரட்டை சதங்கள் அடுத்து சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் 264 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு 209 ரன்களை அடித்துள்ளார். பின்னர் 2017 ஆம் ஆண்டு 208* ரன்கள் அடித்துள்ளார்.
மூன்று விதமான சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், டி-20) சதம் அடித்த இரண்டாவது இந்திய அணி வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் டெஸ்ட் போட்டியை பொருத்த வரை 27 போட்டிகளில் விளையாடி 1585 ரன்கள் எடுத்துள்ளார். அதில் மூன்று சதம், பத்து அரைசதம் அடங்கும். அவரின் சராசரி 39.62 ஆகும்.
ஒருநாள் போட்டியை பொருத்த வரை 199 போட்டிகளில் விளையாடி 7799 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 இரட்டை சதம், 22 சதம், 93 அரைசதம் அடங்கும். அவரின் சராசரி 48.14 ஆகும். அதேபோல ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
நாளை ரோகித் சர்மா 200வது போட்டியில் விளையாட உள்ளார். அதேபோல எம்.எஸ். தோனி 334 போட்டியிலும், விராட்கோலி 222 போட்டியிலும் விளையாடி உள்ளனர். அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 463 போட்டியில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.