2011 முதல் 2012 வரை இந்தியாவுக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ராகுல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது ஓய்வு செய்தியை பகிர்ந்து கொண்டார். 35 வயதான ராகுல் சர்மா சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டிய நாள் வந்துவிட்டது என்று ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவில் எழுதினார். மேலும், பிசிசிஐ மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) க்கு விளையாட வாய்ப்பளித்ததற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.
"இன்றைய நாள் வந்துவிட்டது. எனது கடின உழைப்பு... ஒரு சிறந்த வீரராக ஆவதற்கான வழியைக் கண்டறியும் முயற்சி எப்போதும் எனது உந்துதலாக இருந்து வருகிறது மேலும் எனது கிரிக்கெட் பயணத்தில் தொடர்ந்து என்னைத் தொடர வைக்கிறது.." என்று அவர் எழுதியுள்ளார். கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக், எம்எஸ் தோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கருக்கு இதயப்பூர்வமான நன்றியையும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | அற்புதமாக ஆட்டத்தை முடித்தார் பாண்டியா - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
ராகுல் மேலும் கூறுகையில், "நான் எப்போதும் எனது கடின உழைப்பு மற்றும் உறுதியுடன் கிரிக்கெட்டுக்கு நேர்மையாக இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் இந்த விளையாட்டை முழு மனதுடன் மற்றும் ஆற்றலுடன் விளையாட முடியும், மேலும் நான் கடின உழைப்பு மற்றும் விதியின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவன். கடந்த சில 4-5 வருடங்களாக விஷயங்கள் சுமூகமாக இல்லை என்று நான் சொல்ல விரும்புகிறேன், எனது காயத்தில் இருந்து மீண்ட பிறகு நான் தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டிருந்தேன். எனது காயத்தில் இருந்து மீண்ட பிறகு எனது பந்துவீச்சை வெளிப்படுத்த மாநில அளவில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. இப்போது நான் எனது புதிய இன்னிங்ஸுக்கு தயாராக இருக்கிறேன். ஒரு வீரராக இரண்டாவது இன்னிங்ஸை எதிர்நோக்குகிறேன் & உலக லீக்கிற்காக எதிர்நோக்குகிறேன். . ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய ஆரம்பம் வரும். எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
Thanks to all for ur love and support throughout my journe@BCCI @BCCIdomestic @IPL #retirement pic.twitter.com/anqBGUSwoa
— Rahul Sharma (@ImRahulSharma3) August 28, 2022
ராகுல் சர்மா கேரியர்:
ராகுல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் முறையே ஆறு மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல அணிகளில் அவர் 2010 முதல் 2015 வரை ஐபிஎல்லில் விளையாடினார். அவரது முதல் தர வாழ்க்கையைப் பொறுத்தவரை, ராகுல் 21 போட்டிகளில் விளையாடி 51.58 சராசரியில் மொத்தம் 39 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிக்க | IND vs PAK: தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய் ஷா! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ