சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2017-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது அளிக்கப்படுகிறது.
ஐசிசியின் 2017-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 1,460 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் 6-சதங்கள், 7 அரை சதங்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதையடுத்து கோலி மூன்று விதமாக கிரிக்கெட் போட்டிக்கும் தலைமை தாங்கி அணியை வழிநடத்தி வருகிறார்.
ஐசிசி-யின் 2017-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு மேலும் இரண்டு இந்திய வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.
> சேதுஷ்வர் பூஜாரா.
> அஸ்வின் ரவிச்சந்திரன்.
Indian Cricket Captain Virat Kohli named ICC Cricketer of the Year 2017 and recipient of the Sir Garfield Sobers Trophy, also named ICC ODI Player of the Year at the 2017 #ICCAwards. (file pic) pic.twitter.com/vftJdrHfos
— ANI (@ANI) January 18, 2018