ஐபிஎல் 2017: 15வது லீக், 51 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

Last Updated : Apr 16, 2017, 09:28 AM IST
ஐபிஎல் 2017: 15வது லீக், 51 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சன்சு சாம்சான், சாம் பில்லிங்க்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6.5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த போது சன்சு 19(18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கருண் நாயர் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் சாம், ஷிரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர். ஷிரேயாஸ் நாயர் 22(17) ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த சாம் பில்லிங்ஸ் 55(40) ரன்களை வெளியேறினார். இறுதியாக கோரி ஆண்டர்சன் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 189 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் வோஹ்ரா, சாகா, ஆம்லா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய மோர்கன்(22), டேவிட் மில்லர்(24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மேக்ஸ்வெல் 2 பந்துகளில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை போராடிய அக்ஸர் பட்டேல் 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

டெல்லி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Trending News