சென்னையை விட்டுக்கொடுக்காத மும்பை! தொடர்ந்து 4வது போட்டியிலும் தோல்வி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 11:41 PM IST
  • மும்பை அணி தொடர்ந்து 4வது தோல்வியை சந்திக்கிறது.
  • பெங்களூரு அணிக்கு எதிராகவும் தோல்வி.
  • சென்னையை தொடர்ந்து மும்பையும் 4 போட்டிகளில் தோல்வி.
சென்னையை விட்டுக்கொடுக்காத மும்பை! தொடர்ந்து 4வது போட்டியிலும் தோல்வி!  title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதின. இரவு 7.30-க்கு தொடங்கின இந்த போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்ச் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்வது.  கடந்த மூன்று போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. மும்பை அணியில் புதிய மாற்றமாக இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடினர். 

 

மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?

ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய மும்பை அணிக்கு பவர்ப்பிளே  சிறப்பாக அமைந்தது. ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார்.  50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த மும்பை அணி 79 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்தது.  மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.   திலக் வர்மா, கீரன் பொல்லார்ட் ஆகியோர் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.  மும்பை அணி 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்த்த நிலையில் சூரியகுமார் யாதவ் மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டார்.  37 பந்தில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 68 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.  

 

எளிய இலக்கை எதிர்த்து ஆடிய ஆர்சிபி அணைக்கும் துவக்கம் சிறப்பாக அமைந்தது. நிதானமாக ஆடிய ஃபாஃப் டு பிளெசிஸ் 16 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிரடியாக விளையாடிய அனுஜ் ராவத் 47 பந்தில் 6 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 66 ரன்களை அடித்து ரன் அவுட் முறையில் அவுட்டானார்.  மறுபுறம் விராட் கோலி 48 ரன்களில் அவுட் ஆனார்.  திருமணத்திற்குப் பிறகு ஐபிஎல் 2022-ன்  முதல் போட்டியில் களமிறங்கினார் மேக்ஸ்வெல்.  பேட்டிங் செய்த இரண்டு பந்துகளிலும் 2 பவுண்டரிகளை அடித்து ஆர்சிபி அணி வெற்றி பெற செய்தார், 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி 152 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியும் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

 

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரசிகர்கள்? மும்பை - சென்னை அணிகள் காரணமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News