சியர் லீடர்கள், ஆட்டம், பாட்டம் எல்லாம் ஸ்டார் டிவி ஒளிபரப்புகளில் இடம் பெறாது என்றும் ஸ்டார் நிறுவனம் அதிரடி அறிவித்துள்ளது.
இதுவரை இந்தப் போட்டிகளை ஒளிபரப்பி வந்த சோனி டிவி, மைதானங்களில் ஆடும் சியர் லீடர்களுக்குப் போட்டியாக ஸ்டூடியோவுக்குள்ளும் சியர் லீடர்களை வைத்து டான்ஸ் போட்டும் காட்சிகள் இடம் பெற்று வந்தது.
இதற்கு முற்றிலும் நேர் மாறாக இருக்கப் போவதாக ஸ்டார் கூறியுள்ளது. ஆட்டம் பாட்டம் இல்லாத சீரியஸ் கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு தரப் போவதாக கூறுகிறது.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உலகளாவிய உரிமையை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது. ஸ்டார் டிவி சானல்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும்.
இந்நிலையில் தங்களது ஸ்டைல் எப்படி இருக்கும் என்பதை ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உதய் சங்கர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை உலகத் தரத்துக்கு வழங்குவோம். சீரியஸான கிரிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும். கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம் என்றார்.
எந்தவிதமான மசாலாவும் இல்லாமல் இயல்பாக, கிரிக்கெட்டை மட்டுமே வழங்குவது ஸ்டார் டிவியின் ஸ்டைல். அதைத்தான் இப்போது ஐபிஎல் போட்டிகளிலும் வழங்கப் போகிrom என்று ஸ்டார் இந்தியா கூறியுள்ளது.
16,347 கோடி ரூபாய்க்கு உரிமையை ஏலத்தில் எடுத்துள்ளது ஸ்டார் இந்தியா. எனவே தனது ஒளிபரப்பையும் அது உலகத் தரத்தில் வழங்கப் போகிறது. அதற்கான திட்டங்களிலும் அது இறங்கி விட்டது. தனது ஸ்டைலை மாற்றாமல் அதேசமயம், ரசிகர்களுக்கு சரியான கிரிக்கெட் விருந்தளிக்கும் வகையிலும் போட்டி ஒளிபரப்பு இருக்கும் என்றும் கூறி உள்ளது.