சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இன்று (மார்ச் 27, திங்கள்கிழமை) நடைபெற்ற பயிற்சியில் பார்க்க முடிந்தது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளே இருந்த ஆதரவாளர்கள், விளையாடுவதற்கு வெளியே வருவதற்கு முன், ஜிம்மில் வார்ம்அப் செய்யும் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் சூப்பர் பேட்டர் தோனியை பார்த்து பரவசம் ஆனார்கள்.
பயிற்சியில் இருந்த தோனியைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் ஜிம்மிற்கு வெளியே கூடி உரத்த 'தோனி தோனி' என முழக்கங்களை எழுப்பினார்கள். தங்கள் கேப்டனுக்கு 'சென்னை ரசிகர்கள்' ஆதரவு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Oh Captain, My Captain. #Dhoni pic.twitter.com/z8yaym6w3Q
— WhistlePodu Army- CSK Fan Club (@CSKFansOfficial) March 27, 2023
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோ, தோனி பின்னர் சேப்பாக்கத்தில் பயிற்சிக்காக வெளியேறுவதைக் காட்டுகிறது. தோனி பயிற்சி ஆடுகளத்தை நோக்கிச் செல்லும்போது, கூட்டம் மீண்டும் தங்கள் கேப்டனின் பெயரைச் சொல்லி முழக்கமிட்டது.
Ms Dhoni signs off after his stupendous knock pic.twitter.com/wtWGkltzdE
— SergioCSK (@SergioCSK7) March 27, 2023
ஐபில் போட்டித்தொடரின் 16வது பதிப்பில் தோனி மீண்டும் சிஎஸ்கேயை வழிநடத்துவார். முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி, 2008 ஆம் ஆண்டு தொடக்க சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்கிஸ் இருந்து வருகிறார், முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இதுவும் போச்சா? பதவி, பணம் என இரண்டையும் இழந்து நிற்கும் கேஎல் ராகுல்!
2023 ஐபிஎல் சீசன் தோனியின் கடைசி லீக்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 2022 சீசனின் முடிவில் தான் 2023ல் விளையாடுவேன் என்பதை தோனி உறுதி செய்திருந்தாலும், 2023 சீசன் எப்படி செல்கிறது என்பதைப் பொறுத்தே தனது ஆட்டம் தொடரும் என்று தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தகக்து.
கோவிட் தொற்றுநோய் காரணமாக மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை. சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பற்றியும் தோனி பேசியிருந்தார்.
இந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) க்கு எதிரான போட்டியில் களம் காணும்.
நான்கு முறை சாம்பியனான குஜார்ட் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தங்கள் சீசனை சிஎஸ்கே அணி தொடங்கவுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ