பிபா உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், தொடரை நடத்தும் கத்தார் அணி, ஈக்வடார் அணியும் 0 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 92 ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில், தொடக்க போட்டியில் முதல்முறையாக தொடரை நடத்தும் அணி தோல்வியடைந்துள்ளது. கத்தார் அணியை வீழ்த்தியதன் மூலம், ஈக்வடார் அணி 92 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த பெருமையை பெற்றுள்ளது.
இந்தியாவில் வியாகாம் 18 நிறுவனம் இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது. போட்டியை ஜியோ சினிமாஸ் ஆஃப் மூலம் நேரடியாக காணவும் வசதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் போட்டி, நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, பலமுறை தடங்கல் ஏற்பட்டது எனவும் போட்டியை முழு திருப்தியுடன் காண முடியவில்லை எனவும் ரசிகர்கள் தங்களின் ஏமாற்றத்தை இணையத்தில் கொட்டி வந்தனர். சந்தா கட்டி, வூட் (VOOT) ஆஃப்பில் பார்க்கும் ரசிகர்களுக்கு இதே பிரச்சனை என தெரிவிக்கப்படுகிறது.
This is how i watched the first goal#JioCinema #FAIL pic.twitter.com/f1ImO4S4xB
— Madhu Lambu (@MadhuLambu) November 20, 2022
கால்பந்து ரசிகர்கள் உலகளவில் அதிகமானோர் இருப்பதால், இரவு பகல் என்று பாராமல் பலரும் நேரலையில் போட்டியை காண்பார்கள். அப்படி, தூக்கத்தை தொலைத்து போட்டியை காண வருபவர்களுக்கு, ஒளிபரப்பில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர்கள் தங்களின் ஆதங்கத்தை ஜியோ சினிமாஸ் மீது காட்டி வருகிறன்றனர். ஜியோ சினிமாஸ் நிறுவனத்தை குறிப்பிட்டு, மீம் வடிவத்திலும் தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.
The worst ever start for a World Cup broadcast.
Leave it if you can't do it #JioCinema. Disappointed.#QatarWorldCup2022 #FIFAWorldCup#JioCinema pic.twitter.com/dZ4bonUHPf
— liafuS (@sufail_wr) November 20, 2022
இந்நிலையில், ஜியோ சினிமாஸ் ரசிகர்களின் அதிருப்திக்கு அவர்களின் மொழியிலேயே அதாவது, மீம் வடிவிலேயே பதிலளித்துள்ளது. ஜியோ சினிமாஸ் வெளியிட்டுள்ள, அந்த வீடியோ மீம் பதிவில், வேகமாக இயங்கும் இயந்திரத்துடன், இருவர் கடினமாக முயன்று தங்களின் வேலை செய்துவருகின்றனர். அதில், அவர்களின் உடல் முழுவதும் சேறும் சகதியும் நிரம்பியிருக்கிறது.
So that's why it's free...#FIFAWorldCup #JioCinema #Jio pic.twitter.com/pFCS8mBOPB
— Akhil Chauhan (@CheeTaHOO7) November 20, 2022
இந்த வீடியோ மீம் உடன்,"எங்களின் அணியினர் உங்களின் சிலருக்கு ஏற்பட்ட ஒளிபரப்பு தடங்கல் பிரச்சனை தீர்க்க இப்படி கடினமாக பணியாற்றி வருகின்றனர்" என ஜியோ சினிமாஸ் பதிவிட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன், ட்விட்டர் ஊழியர்களின் பணி குறித்து எலான் மஸ்க் பகடியாக இதே வீடியோ மீம்மை பகிர்ந்திருந்தார்.
Our team hard at work to solve some of your buffering issue pic.twitter.com/mjxLV5cgmD
— JioCinema (@JioCinema) November 20, 2022
மேலும், ஜியோ சினிமாஸ் ஆஃப்பை அப்டேட் செய்து, உலகக்கோப்பையை எந்த சிரமமுமின்றி பார்த்து கொண்டாடுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிபா உலகக்கோப்பையில் இன்று, குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, ஈரான் அணி உடன் மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும்.
மேலும் படிக்க | உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண ரூ.23 லட்சத்துக்கு வீடு வாங்கிய கேரள ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ