இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும், தற்போது பாஜகவில் இருப்பவருமான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் திடீரென ரவிச்ந்திரன் அஸ்வின் குறித்து கடுமையான விமர்சனங்களை டிவிட்டரில் மழையாக பொழிந்துள்ளார். நேற்று அஸ்வின் பந்துவீசுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அவருடைய ஆக்ஷனை மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள் அஸ்வினுக்கு ஐடியா சொல்றளவுக்கு நீங்க என்ன சார் சாதித்து இருக்கிறீர்கள் என கேட்க, கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்.
அதன்பிறகு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தாறுமாறான விமர்சனங்களை எல்லாம் கூறினார். அஸ்வின் ஒரு சுயநலவாதி, அவர் ஒரு தகுதியான கிரிக்கெட் வீரரே கிடையாது என தெரிவித்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், அஸ்வின் பிட்சுகளை சேதப்படுத்துமாறு பிட்ச் பராமரிப்பாளர்களிடம் தெரிவிப்பதை தானே பலமுறை நேரில் பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் பதிவில், " அஸ்வின் இந்தியாவில் மட்டும் 378 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஆனால் SENA நாடுகள் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இதுவரை எத்தனை விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்? வெறும் 70. ஆனால் இந்தியாவில் மட்டும் அவரால் எப்படி இத்தனை விக்கெட்டுகளை எடுக்க முடிந்திருக்கிறது?
மேலும் படிக்க | ரோஹித் சர்மானா பயம்... உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய பௌலர் சொன்ன அந்த வார்த்தை!
(@LaxmanSivarama1) September 30, 2023
ஏனென்றால் அவர் பிட்ச் பராமரிப்பாளர்களிடம் சென்று எப்போதும் பேசுவார். விமானத்தில் இருந்து இறங்கியவுடன் மைதானத்துக்கு சென்று மைதான பிட்ச் பராமரிப்பாளர்களிடம் எந்த இடத்தில் பிட்சை சேதப்படுத்த வேண்டும் என்று கூறிவிடுவார். அதேபோல் அந்த இடத்தில் மட்டும் பிட்ச் சேதமாகியிருக்கும். சரியாக அந்த இடத்தில் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இதெல்லாம் யாருக்கும் தெரியாமல் இல்லை. இந்தியாவில் இப்படி பந்துவீசும் அவரால் ஏன் வெளிநாடுகளில் சிறப்பாக பந்துவீச முடியவில்லை?.
(@LaxmanSivarama1) September 30, 2023
ஏனென்றால் அவர் தகுதியில்லாத கிரிக்கெட் வீரர். எல்லாவற்றும் காரணம் சொல்லிக் கொண்டிருப்பவர். சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் நன்றி மறந்தவர் அவர். அவர்கள் இல்லையென்றால் அஸ்வினால் இந்திய அணியில் விளையாடி இருக்கவே முடியாது. அப்போது, ஹர்பஜன் இந்திய அணியில் சிறப்பாக தான் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அஸ்வினுக்காக தோனி அவரை அணியில் இருந்து நீக்கினார். கடைசியில் இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்கும், தோனிக்கும் எதிராகவே செயல்பட்டார் அஸ்வின். அவருடைய பந்துவீச்சு உலக கோப்பையில் எடுபடாது. செம அடி வாங்கும்" என்று கடுமையாக தெரிவித்திருக்கிறார் லக்ஷமண் சிவராமகிருஷ்ணன். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் இப்போது புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அவர்.
(@LaxmanSivarama1) September 30, 2023
அதில் அஸ்வின் இப்போது தொலைபேசியில் தனக்கு அழைத்து பந்துவீச்சு குறித்து நான் பதிவிட்ட புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டதாகவும், நானும் அவர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடுமாறு வாழ்த்து தெரிவித்துவிட்டதாகவும் கூறி, அஸ்வின் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ