Ashes 2023:மரண பயத்தை காட்டிய ஸ்டோக்ஸ்... போராடி தோற்ற 'பாஸ்பால்' - ஆஸி., முன்னிலை!

Ashes 2023 Lords Test: ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 2, 2023, 09:50 PM IST
  • பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்தும் வீண்.
  • கடைசி விக்கெட்டு பார்ட்னர்ஷிப்பில் ஜோஷ் டங் - ஆண்டர்சன் ஜோடி வெற்றிக்கு போராடியது.
  • ஆஸ்திரேலியாவின் நிதான ஆட்டம், அவர்களுக்கு வெற்றியை பெற்று தந்தது.
Ashes 2023:மரண பயத்தை காட்டிய ஸ்டோக்ஸ்... போராடி தோற்ற 'பாஸ்பால்' - ஆஸி., முன்னிலை! title=

Ashes 2023 Lords Test: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த ஜூன் 28ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததால், சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் அந்த அணி களமிறங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்யும்படி பணித்தது. ஆனால், அந்த முடிவு அவர்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்கள், ஹெட் 77 ரன்களை குவித்து அசத்தினர். இதனால், ஆஸ்திரேலியா 416 ரன்களை குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன், டங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 325 ரன்களை மட்டுமே பெற்றது. அதில் டக்கெட் 98 ரன்களை அதிகபட்சமாக இங்கிலாந்து தரப்பில் எடுத்தார். ஸ்டார்க் 3 விக்கெட்டுகள், ஹெட், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 92 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா பேட்டிங் விளையாடியது. இதில் 279 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 271 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

மேலும் படிக்க | இந்திய அணியில் விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட் எடுத்திருப்பேன் - பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

நான்காம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 114 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில், 257 ரன்கள் எடுத்தால் வெற்றி நிலையில், ஸ்டோக்ஸ், டக்கெட் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். டக்கெட் 83 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 10 ரன்களிலும் வெளியேறினர். பேர்ஸ்டோவ்வின் ரன் அவுட் சற்று சர்ச்சைக்குள்ளானது. zeenews.india.com/tamil/sports/bairstow-run-out-by-alex-carey-is-legal-or-unfair-ashes-2023-lords-test-eng-vs-aus-451994

அதன்பின், ஸ்டோக்ஸ் விஸ்வரூபம் எடுத்தார். கிரீனின் ஓவரில் 24 ரன்களை எடுத்த அவர், பாஸ்பால் அணுகுமுறையை கைக்கொள்ள தொடங்கினார். அவருக்கி பிராட் துணையாக நிற்க, இங்கிலாந்தின் பக்கம் ரன்கள் வந்துகொண்டே இருந்தது. முதல் செஷன் மட்டுமின்றி இரண்டாவது செஷனிலும் ஸ்டோக்ஸின தாண்டவம் தொடர்ந்து, சதத்தை தாண்டி 150 ரன்களை ஸ்டோக்ஸ் பதிவு செய்தார். அந்த சூழலில், ஹசில்வுட் வீசிய பந்தில் ஸ்டோக்ஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அவர் 214 பந்துகளை எதிர்கொண்டு 155 ரன்களை குவித்தார். அதில் 9 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடக்கம். குறிப்பாக, பிராட் - ஸ்டோக்ஸ் ஜோடி 108 ரன்கள் வரை தாக்குபிடித்தது. அதன்பின், ராபின்சன் 1, பிராட் 11 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கடைசி பார்ட்னர்ஷிப்பில் டங் - ஆண்டர்சன் சற்று நேரம் போராடி பார்த்தனர் இந்த ஜோடி 25 ரன்களை குவித்தது. அப்போது, ஸ்டார்க் பந்துவீச்சில் டங் போல்டாக ஆஸ்திரேலியா அணி தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வானார். 

மேலும் படிக்க | ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் வெளியேற்றம்: ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News