கடைசி உலகக்கோப்பை விளையாட்டும் இரண்டு ஜாம்பவான்கள்!!

இன்று நடைபெற உள்ள இந்தியா - இலங்கை ஆட்டத்தில் ஆட உள்ள எம்.எஸ்.தோனி மற்றும் லசித் மலிங்கா ஆகியோருக்கு கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடராகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 6, 2019, 02:17 PM IST
கடைசி உலகக்கோப்பை விளையாட்டும் இரண்டு ஜாம்பவான்கள்!! title=

புதுடெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 44-வது லீக் ஆட்டம் லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.

இன்று தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்க்கொள்கிறது. இந்த ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்துடன் இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிடும். இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால், இன்னும் 2 போட்டியில் விளையாட உள்ளது. அரையிறுதியில் வெற்றி பெரும் பட்சத்தில், மூன்று போட்டிகளில் விளையாடும். 

இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் மூத்த வீரர்களில் எம்.எஸ்.தோனி மற்றும் லசித் மலிங்கா இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பனா பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.

நடப்பு தொடரில் எம்.எஸ்.தோனி 8 லீக் போட்டிகளில் விளையாடி 223 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது நிலவரப்படி, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 32வது இடத்தில் உள்ளார். அதேபோல 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள மலிங்கா 12 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். 

இந்த உலகக் கோப்பை தொடர் இரண்டு வீரர்களுக்கும் கடைசி தொடர் ஆகும். அதுவும் இன்றைய போட்டி மலிங்காவுக்கு கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாடுவார். இரண்டு வீரர்களும் மோதும் கடைசி போட்டி என்பதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இருவரையும் சிறப்பிக்கும் விதமாக ஐசிசி காணொளியை வெளியிட்டுள்ளது.

 

 

Trending News