அப்செட்டில் பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கும் பிசிசிஐ, 20 ஓவர் அணியை மறுகட்டமைப்பு பணிகளை உடனடியாக தொடங்கியுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா இன்னும் நீக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த தகவலை எதிர்பார்க்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மா தாமாக விலகிவிட்டால் அவருக்கு மரியாதை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அதிரடி! முடிவுக்கு வருகிறதா இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்?
பிசிசிஐ முதல் ஸ்கெட்ச்
மூத்த வீரர்கள் இல்லாத அணியை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் பிசிசிஐ, இளம் வீரர்கள் கொண்ட அணி மட்டுமே இனி 20 ஓவர் இந்திய அணியாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 ஓவர் உலக கோப்பைக்கு தோல்விக்கு பிறகு தங்களின் நடவடிக்கைகளை அதற்கேற்றார்போல் தொடங்கியுள்ளது. அதாவது, அணியை கட்டமைக்கும் பணியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறது பிசிசிஐ
பேடி அப்டன் நீக்கம்
20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் மனநல ஆலோசகராக சேர்க்கப்பட்டார் பேடி அப்டன். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், 2011 ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றபோது, அணியுடன் இணைந்து பணியாற்றினார். அவரை இப்போது இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து நீக்கியிருக்கிறது பிசிசிஐ. 20 ஓவர் உலக கோப்பை வரை மட்டுமே அவருடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில், அதனை புதுபிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டவில்லையாம். இதனால், விரைவில் அவருடைய இடத்துக்கு வேறொருவர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம்.
மேலும் படிக்க | கிஸ் அடித்த காதலி... மைதானம் என்றும் பார்க்காத பெல்ஜியம் வீரர் - ரொமான்ஸ் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ