உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பி.வி.சிந்து நுழைந்துள்ளார்!
சுவிட்சர்லாந்து மான்சென்ஸ்டீன் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் பெண்களுக்கான அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீனாவின் சென் யுஃபை மோதினர்.
40 நிமிடங்கள் நீடித்த ஒருதலைப்பட்ச அரையிறுதி ஆட்டத்தில் 21-7, 21-14 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து வென்றார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் செட்டை 21-7 என்ற கணக்கில் எளிதாக வெற்றிப் பெற்றார்.
Hat-trick of finals IndiaontheRise #Sindhu pic.twitter.com/kaCbkpECst
— BAI Media (@BAI_Media) August 24, 2019
அதன்பின்னர் இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-14 என்று வென்று நேர் செட்களில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
இதன்மூலம் மூன்றாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நுழைந்துள்ளார்.
இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் அரையிறுதி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2017, 2018 பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பிவி சிந்து இறுதிப் போட்டியில் முறையே நஜோமி ஒகுஹாரா மற்றும் கரோலினா மரின் ஆகியோரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.