ICC Test: தரவரிசையில் இந்தியா முதலிடம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குதூகலம்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்தியா ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2021, 05:09 PM IST
  • தரவரிசையில் இந்தியா கிரிக்கெட் அணி முதலிடம்
  • பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குதூகலம்
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது
ICC Test: தரவரிசையில் இந்தியா முதலிடம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குதூகலம் title=

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்தியா ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணிக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளார். 

ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ள ரவி சாஸ்திரி (Ravi Shastri), “இந்த அணி நம்பர் 1 என முடிசூட்டப்படுவதில் உறுதியான திடமான கவனத்தையும் காட்டியுள்ளது. அணி வீரர்கள் பல மாற்றங்களை எதிர்கொண்டார்கள்.

Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

விதிமுறைகள் மாறின, ஆனால் இந்திய அணியினர், எதிர்கொண்ட ஒவ்வொரு இடையூறையும் சமாளித்து முதலிடத்தைப் பெற்றுள்ளனர். எனது அணி வீரர்கள் கடினமான காலகட்டத்தையும் பொருட்படுத்தால், மும்முரமாக கிரிக்கெட் விளையாடினர். இது இந்திய அணிக்கு சூப்பர் பெருமை கொடுக்கும் தருணம். ”

இந்த விளையாட்டின் மிக நீண்ட பதிப்பில் இந்தியா அருமையான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் வென்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளும். 24 போட்டிகளில் விளையாடி, 2914 புள்ளிகளைக் குவித்து 121 மதிப்பீட்டுடன் (rating) கொண்ட இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Also Read | மே 19 முதல் இந்திய கிரிக்கெட் அணி Bio-bubble தனிமைப்படுத்தலுக்கு செல்கிறது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.120 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை விராட் கோலியின் ஆண்கள் அணி முந்தியிருக்கிறது.   
இங்கிலாந்து (109) மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் (108) நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. 
பாகிஸ்தான் (94) ஐந்தாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் (84) ஆறாவது இடத்திலும் உள்ளன.

தென்னாப்பிரிக்கா (80), இலங்கை (78) ஆகியவை முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளன.
பங்களாதேஷ் (46) ஒன்பதாவது மற்றும் ஜிம்பாப்வே (35) பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிடம் தோற்றுப் போன இங்கிலாந்து மீண்டும் உத்வேகத்துடன் விளையாடி, சொந்த மண்ணில் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News