இந்திய நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. ரஹானே தலைமையில் களம் இறங்கிய இளம் இந்திய அணி பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியுடன் மோதியது. கான்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ALSO READ இந்திய மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லாத நியூஸிலாந்து!
இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் சிராஜ் இடம் பெறவில்லை. டி20 தொடரில் ஓய்வில் இருந்த வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் இணைந்துள்ளார். ஓபனிங் பேட்ஸ்மேனாக மயங்க அகர்வால் மற்றும் கில் களம் இறங்கினர். ஜேமிசன் வேகத்தில் அகர்வால் 13 ரன்களில் வெளியேறினார். பின்பு கில் - புஜாரா கூட்டணி நிதானமாக ஆடியது. சிறப்பாக ஆடிய கில் அரைசதம் அடித்தார். அதன் பின் வந்த கேப்டன் ரஹானே 35 ரன்களில் வெளியேறினார். இருவரையுமே ஜேமிசன் வேகத்தில் வீழ்ந்தனர். 145 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.
run partnership comes up between @ShreyasIyer15 & @imjadeja
Live - https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/jowlva50Go
— BCCI (@BCCI) November 25, 2021
அதன்பின்பு ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜடேஜா இணைந்து கச்சிதமாக விளையாடினர். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்தார் ஷ்ரேயஸ். மறுபுறம் கலக்கிய ஜடேஜா அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 84 ஓவர்களுக்கு 258 ரன்கள் அடித்திருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி 6 ஓவர்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது. ஷ்ரேயஸ் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
STUMPS on Day 1 of the 1st Test.
An unbeaten 113-run partnership between @ShreyasIyer15 & @imjadeja propel #TeamIndia to a score of 258/4 on Day 1.
Scorecard - https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/7dNdUM0HkM
— BCCI (@BCCI) November 25, 2021
ALSO READ ஐபிஎல் 2022: சென்னை, டெல்லி, மும்மை, கொல்கத்தா தக்க வைத்து கொண்ட வீரர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR