20 ஓவர் உலக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் படுதோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறி இருக்கிறது. கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் அடி வாங்கிய இந்திய அணி, இந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்த தோல்வியை ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
பார்ம் இல்லாமல் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த, ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் கடமைக்கு ஆடியதுபோல் ஆடினர். அதுவும் இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டிங் படுமோசமாக இருந்தது. இந்த காம்பினேஷனை வைத்து இந்திய அணி அரையிறுதி வரை வந்ததே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு புள்ளிவிவரங்கள் இருக்கின்றன.
மேலும் படிக்க | ICC T20 World Cup : இந்தியாவை படுகுழியில் தள்ளிய இந்த 4 வீரர்கள் - முழு விவரம்!
ரோகித் மற்றும் ராகுல் சரியான ஓப்பனிங் கொடுத்திருந்தால் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதுபோல் தொடர் முழுவதும் விளையாடினர். கே.எல்.ராகுல் அடுத்தடுத்து அரைசதம் அடித்து தன் பெயரை ஓரளவுக்கு காப்பாற்றிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரிக்கும் கீழாக இருந்தது. கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக மட்டும் ஆடிய அவர், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான அவரின் பேட்டிங் எடுபடவில்லை.
இதனால் அவர் உள்ளிட்ட பல சீனியர் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்து வர இருக்கும் 20 ஓவர் தொடர்களில் சீனியர் வீரர்களை ஓரம்கட்டிவிட்டு மொத்தமாக இளம் படையை 20 ஓவர் உலக கோப்பைக்கு களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ரோகித், விராட்கோலி, அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சீரான இடைவெளியில் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், அடுத்த 20 ஓவர் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போதே பேச்சுகள் எழத் தொடங்கியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ