கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமன்றி, பல லட்சம் இந்தியர்களுக்கு பிடித்த கிரிக்கெட்-பாலிவுட் ஜோடி விராட் காேலி-அனுஷ்கா ஷர்மா. பல நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் இணைந்தனர். இவர்களுக்கு 2ஆண்டுகளுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். இன்று வரை விராட்டும் அனுஷ்காவும் எந்த ஊடகத்தின் கேமரா பிடியிலும் தங்களது குழந்தையின் முகம் சிக்காமல் வளர்த்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபலமான முகமான அனுஷ்கா ஷர்மா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விராட்-அனுஷ்காவின் அழகான காதல்:
தனது மனைவியை ரசிப்பதற்கு என்றுமே தவறாதவர் விராட் கோலி. கிரிக்கெட் களத்தில் பால்வகனியில் நின்று விளையாட்டை ரசிக்கும் அனுஷ்காவிற்கு பறக்கும் முத்தம் விடுவதில் இருந்து, அவருடன் நடனமாடி காலில் அடி வாங்குவது வரை தனது மனைவியுடன் அத்தனை அழகான தருணங்களை பகிர்ந்து வருபவர் விராட். மனைவி குறித்த நேர்காணல்களிலும் சரி, மனைவியுடன் உரையாடுகையிலும் சரி கண்களிலேயே காதலை தெரிக்க விடுபவர் அவர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மனைவிக்காகவும் விராட் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
Love you through thick, thin and all your cute madnes birthday my ev@AnushkaSharma pic.twitter.com/AQRMkfxrUg
— Virat Kohli (@imVkohli) May 1, 2023
விராட்டின் க்யூட் பதிவு:
அனுஷ்கா ஷர்மாவின் அழகான சில போட்டோக்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் விராட் வெளியிட்டுள்ளார். கூடவே, அவருக்கு ஒரு க்யூட் மெசஜேயும் எழுதியுள்ளார். அந்த பதிவில், "நீ செல்லமாக கோபம் கொள்ளும் நாட்கள் உள்பட எல்லா நாட்களிலும் உன்னை நேசிக்கிறேன். எனக்கு எல்லாமுமாக இருப்பவளுக்கு இன்று பிறந்தநாள்.." என்று விராட் மனைவிக்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட்டான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்
அடிக்கடி வைரலாகும் அனுஷ்கா-விராட்:
2017ஆம் ஆண்டு திருமணமானது முதல் ஒன்றாக உள்ள பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் விராட்டும் அனுஷ்காவும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் இருவரும் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ வைரலானது. அதற்கு முன்னர், விராட்டை "ஹே கோலி கோலி.." என்று அழைக்கும் வீடியோவும் வைரலானது. கொரோனா ஊரடங்கின் போது, கனவருக்கு அனுஷ்கா சிகை அலங்காரம் செய்வதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். சமீப காலங்களில், இருவரும் ஒரு சில விளம்பரங்களில் கூட ஒன்றாக தோன்றி ரசிகர்களை குஷி படுத்தினர். இப்படி, ஏதாவது ஒரு வகையில் இவர்கள் இருவரும் வைரலாகி ரசிகர்களின் மனங்களில் அவ்வப்போது இடம் பிடித்து விடுகின்றனர்.
மனைவியின் தியாகம் குறித்து விராட்:
சில நாட்களுக்கு முன்னர், விராட் கோலி ஒரு பாட்கேஸ்டிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தனது மனைவி குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அனுஷ்கா குறித்து பேசிய அவர், தன்னை அவர்தான் நிறைய விஷயங்களை செய்ய ஊக்கப்படுத்துவதாக குறிப்பிட்டார். மேலும் குழந்தை பிறந்தபிறகு, தாயாக அனுஷ்கா பல தியாகங்களைை செய்ததாகவும் அதைப் பார்த்த பிறகு தனது வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என தனக்கு தாேன்றிவிட்டதாகவும் விராட் கூறினார். இப்படி, மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் அவருக்கு தகுந்த மரியாதையையும் சம உரிமையும் அளித்து வரும் விராட் கோலிவை பலர் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் எடுத்த 5 அணிகளின் ரன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ