தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விராட் கோலி (Virat Kohli) விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் இந்த போட்டியில் கேப்டனாக களம் இறங்கியுள்ளார். முதுகு பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் இடம் பிடித்துள்ளார்.
Toss Update - KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4H
— BCCI (@BCCI) January 3, 2022
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்க காத்து இருந்தது இந்திய அணி. இந்நிலையில் தற்போது எதிர்பாராதவிதமாக விராட் கோலி காயத்தினால் போட்டியிலிருந்து விலகியுள்ளார். துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். புஜாரா அல்லது ரஹானேக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர்க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அணி நிர்வாகம் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரண்டாவது டெஸ்டில் விளையாடும் இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ALSO READ | புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR