குயின்ஸ் பார்க் ஓவலில் நேற்று நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக அதிர ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி தனது 19-வது ரன் எடுத்த போது இந்த பெருமையினை பெற்றார். முன்னாள பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டத்தின் இச்சாதனையினை தன்வசப் படுத்தியாருந்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், மியாண்டட் 64 இன்னிங்சில் 1,930 ரன்கள் குவித்துள்ளார். இந்திய வீரர் கோலி 34 இன்னிங்ஸ்களில் மியாண்டட் சாதனையை விஞ்சியுள்ளார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டமிழந்த பின்னர் இந்திய கேப்டன் களத்தில் இறங்கினார். கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கங்குளியின்(11363 ரன்கள்) சாதனையினை கோலி (11406 ரன்கள்) முறியடித்துள்ளார்.
30 வயதான கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் 106 ரன்கள் எடுத்திருந்தார், இதில் இறுதி போட்டியில் அவர் அடித்த 59 ரன்களும் அடக்கம். கோலிக்கும் துணை தலைவர் ரோகித் சர்மாவுக்கும் இடையிலான பிளவு குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியாகி வரும் நிலையில், சர்ச்சைகளை உடைக்க இவரது இந்த பெருமை உதவும் என தெரிகிறது.