கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது

Kallakurichi : கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் முதல்வர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Jul 18, 2022, 11:36 AM IST
  • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்
  • பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது
  • வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
 கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி  13-ம் தேதி  மாடியிலிருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இளைஞர்கள் என பல்வேறு அமைப்பினர் திரளாக ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, போராட்டம் வன்முறையாக மாறியது. இதனைக் கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிரடி படையினர் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதை அடுத்து, மாலை 3 மணிக்கு கனியாமூர் தனியார் பள்ளியானது காவல்துறை கட்டுப்பாட்டில் வந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். 

மேலும் படிக்க | kallakurichi: கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு

 பள்ளி மாணவி விழுந்து இறந்த சம்பவ இடத்தையும், போராட்டக்காரர்களால் வன்முறைகளமாக்கப்பட்ட பள்ளி வளாகத்தையும் உள்துறை செயலர் பனீந்தர ரெட்டி மற்றும் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். 

தொடர்ந்து அவர்கள் இணைந்து அளித்த பேட்டியில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், செயலாளர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 நபர்களையும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, இந்த நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்,  வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை - உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News