சட்டப்பேரவை இன்று, பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் : "கடந்த 2016ல் டெல்லியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 800 மாணவர்கள் பயன்பெற்றனர்"
மேலும் படிக்க | ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்; பல மாணவர்கள் படுகாயம்
அப்போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி :
"7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த எழுச்சி போராட்டத்தின் காரணமாகவே சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது"
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி :
"நான் முதல்வராக இருந்தபோதுதான் அந்தச் சட்டத்திற்கு கையெழுத்திட்டேன். எங்கள் ஆட்சியிலேயே அது நிறைவேற்றப்பட்டது"
பின்னர் மீண்டும் பேசிய அதிமுக உறுப்பினர் கேபி அன்பழகன் :
"அரசு என்பது ஒரு தொடர் நடவடிக்கை. 2004ம் ஆண்டு மாநிலத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகவே திமுக அரசு நடைமுறைப்படுத்தியது"
அப்போது மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி :
"நீங்கள் அரசாணை வெளியிட்டீர்கள் ; அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு சென்று தடையும் வாங்கினீர்கள். ஆனால் திமுக ஆட்சி அமைந்த பின், அதற்காக குழு அமைத்து அதன் பரிசீலனையின்படி நுழைவுத் தேர்வை ரத்து செய்தது கலைஞர் தான், கலைஞர் தான், கலைஞர் தான்!"
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR