அதிமுக பொதுச்செயலாளர் பதவி - தேர்தல் நடத்தும் அதிகாரியாக விசுவநாதன், ஜெயராமன் நியமனம்

அதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 11, 2022, 01:41 PM IST
  • ஈபிஎஸ் - அதிமுக பொதுச்செயலாளரானார்
  • 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல்
  • பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளில் திருத்தங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி - தேர்தல் நடத்தும் அதிகாரியாக விசுவநாதன், ஜெயராமன் நியமனம் title=

அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு

மேலும், கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலை நடத்துவதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்எல்ஏ, கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

Trending News