Lok Sabha Elections 2024: 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 44 லட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்க நகை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் உரிய ஆவணம் இன்றி 50,000 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்ல கூடாது என விதிமுறைகள் உள்ளது. 24 மணி நேரமும் நிலைக்குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையில் மிண்ட் தெருவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் வாகனத்தைச் சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் தங்க நகைகளை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்துள்ளார். அதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள ஒரு நகை பட்டறைக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ