காவிரி வாரியம்: பிரதமருக்கு வீடியோ-வை தொடர்ந்து கமல் கடிதம்!

காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்வது உங்கள் கடமை; பிரதமர் மோடியின் செயல்பாட்டை உடனே எதிர் பார்த்திருக்கும் கமல்ஹாசன்..!  

Last Updated : Apr 12, 2018, 01:24 PM IST
காவிரி வாரியம்: பிரதமருக்கு வீடியோ-வை தொடர்ந்து கமல் கடிதம்! title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழகம் முழுதும் போரட்டக்களமாக மாறியது. 

இதைதொடர்ந்து, காவிரிக்காக திரை பிரபலங்கள் அனைவரும் மௌன போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் சென்னை மாமல்லபுரத்தில் பாதுகாப்புத் துறை சார்பில் இராணுவ கண்காடியை பாரத பிரதமர் இன்று துவக்கி வைப்பதற்காக தமிழகம் வந்தார். பிரதமரின் வருகைக்கு தமிழகத்தில் பல பகுதியில் எதிர்ப்பு எழுந்தது. 

இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பாரத பிரதமர்க்கு வீடியோ பதிவு ஒன்றை வழங்கியுள்ளார். வீடியோ பதிவை தொடர்ந்து தற்போது எழுத்து பூர்வமான கடிதம் ஒன்றையும் நடிகர் கமல் வழங்கியுள்ளார். 

இதோ அந்த கடிதம்...! 

 

 

Trending News