தென்னிந்திய சமையல் கலைஞர்களுக்கு உலகளவில் Demand உள்ளது-செஃப் தாமு

இளைஞர்கள் சமையற் கலையில் திறன்களை வளர்த்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் SICA வின் சமையல் போட்டி மற்றும் கண்காட்சி சென்னையில் நடக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 11, 2023, 06:57 PM IST
  • தமிழகத்தின் பிரபலமான சமையற் கலைஞர்களுள் ஒருவர், செஃப் தாமு.
  • இவர் தென்னிந்திய சமையற் கலைஞர்களுக்கு டிமாண்ட் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • இவர் பங்கேற்கும் சமையல் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது.

Trending Photos

தென்னிந்திய சமையல் கலைஞர்களுக்கு உலகளவில் Demand உள்ளது-செஃப் தாமு title=

தென்னிந்திய செஃப் அசோசியேசன் SICA வின் தலைவர் செஃப் தாமு மற்றும் பொது செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அனந்த சந்திப்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை SICA வின் 6வது ஆண்டிற்கான சமையல் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள சமையல் நிபுணர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு தொழில்முறை தளத்தை நிறுவுதல், படைப்புத் திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.  

தொழில்முறை போட்டியை அணுகும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் நோக்கில் லங்கா செஃப்ஸ் கில்ட் நிறுவனத்தின் மாஸ்டர் சமையல் பயிற்சியாளர் செஃப் டிமுது குமாரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த 4  சமையல் நிபுணர்களுடன் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய 4 நகரங்களில் ஆகஸ்ட் மாதம் SICA ஏற்கனவே பேஸ்ட்ரி ஆர்ட் மற்றும் ஹாட் பிளேட் பிரசன்டேஷன் குறித்த பயிலரங்குகளை நடத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய செஃப் தாமு..

சமையல்களை துறையில் இருக்கும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டது தான் இந்த நிகழ்வு குறிப்பாக பாரம்பரிய சிறுதானிய வகைகளை வைத்து ஆரோக்கியமான சமைக்கக்கூடிய உணவுகளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவதும் இந்நிகழ்வின் நோக்கம். தற்போது இது போன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்கிறார்கள். அது அவர்களது திறன்களை வளர்த்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் வருகின்ற 15 16 17 தேதியில் நடக்கக்கூடிய இந்த நிகழ்வில் சுமார் 2000 சமையல் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். WACS அமைப்பின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச நடுவர் குழு வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள சமையல் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படுவார்கள் இதில் 25 க்கும் மேற்பட்ட சர்வதேச நடுவர்களுடன், கல்லூரி மாணவர்கள் முதல் சமையல் வல்லுனர்கள் வரை பல்வேறு பிரிவினர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

மேலும் படிக்க | AR Rahman இசை நிகழ்ச்சி குளறுபடி - விரைந்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

இந்த நிகழ்வில் புரோட்டா மற்றும் பிரியாணி செய்வதற்கான போட்டிகள் நடைபெற இருக்கிறது இது அனைவரும் கண்களுக்கு விருந்தாகவும் அமைய இருக்கிறது. நடைபெற இருக்கின்ற போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பின்படி அதிகப்படியான மதிப்பெண் எடுப்பவர்களை கூடுதலாக அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஜெர்மனியில் நடைபெறும் சமையல் கலைஞர்கள் காண ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், தமிழக உணவு முறைகளில் மட்டும்தான் ‘உணவே மருந்து’ எனும் கருத்து இருப்பதாகவும் அதனால் உலகளவில் தென்னிந்திய சமையல் கலைஞர்களுக்கு டிமாண்ட் இருப்பதாகவும் தாமு தெரிவித்தார். 

மேலும் படிக்க | ஹெச் ராஜா கைது: கொசுவர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News