சென்னை: தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்தை எதிர்த்து சிலர் இன்று (வெள்ளிக்கிழமை) மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அடைந்தனர். ரஜினிகாந்த் மீது திராவிட அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்யும் போது, வழக்கு தாக்கல் செய்தவர்கள் மீது கோபமடைந்த நீதிமன்றம் "உயர்நீதிமன்றத்திற்கு ஓடி வருவதற்கு பதிலாக நீங்கள் ஏன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை?" எனக் கேள்வி எழுப்பியது.
1971 ல் சேலத்தில் நடந்த பெரியார் பேரணி குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். தமிழ் பத்திரிகையான "துக்ளக்" நிகழ்சியில் பேசிய ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார் ஒரு பேரணியை நடத்தியதாகவும், அதில் ராமர் மற்றும் சீதையின் நிர்வாண புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார். அவரது அறிக்கையை எதிர்த்து, திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
பெரியார் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் தனது அறிக்கைக்கு மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், ரஜினிகாந்த் பிடிவாதமாக இருப்பதால் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பெரியார் குறித்து நான் கூறியது உண்மை என்றும் அறிக்கையின் அடிப்படையில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"பெரியார்" இந்து தெய்வங்களை கடுமையாக விமர்சித்தவரா?
ரஜினிகாந்த் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவை குறிவைக்கிறார் என சில அரசியல் ஆலோசகர்கள் கூறிவருகின்றனர். மு. கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் குறித்து ரஜினி கருத்து தெரிவித்தார். பெரியார் இந்து கடவுள்களை கடுமையாக விமர்சிப்பவர் என்று சூப்பர் ஸ்டார் கூறியிருந்தார்.
ஆனால் ரஜினிகாந்த் கூறியதை போல பெரியார் யாரையும் விமர்சிக்கவில்லை. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் திராவிட கழகத்தை நிறுவினார் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். இந்து மதத்தில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிராமணர்களை அவர் கடுமையாக எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின் மேம்பாட்டிற்காகவும் அவர் கிளர்ந்தெழுந்தார். சமூக நீதிக்காக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.