கடந்த திங்கட்கிழமை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நகலை டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் நேரில் ஒப்படைத்தார். அதன் பின்னர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
மேலும் படிக்க | "இதற்குப் பதில் சொல்வாரா பழனிசாமி? - கேள்விகளை அடுக்கிய ஆர்.எஸ்.பாரதி
‘இது என் குரல் அல்ல என பொன்னையன் கூறியதை நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை அவர் ஆடியோவில் உள்ளது போல் அப்படியே சொல்லி இருந்தாலும்....’
அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் சட்ட விதி திருத்தங்களை முறையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளோம். கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக ஏகமனதாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்றாலும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஆவணமாக தாக்கல் செய்துள்ளோம். அதிமுகவில் 2,663 பொது குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 2,460 பொதுகுழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் கலந்துகொண்டனர்.
இதில் 2,428 உறுப்பினர்கள் கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு கையப்பமிட்டு ஆதரவு அளித்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்களும் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் தலையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கோ, உயர்நீதிமன்றத்திற்கோ இல்லை என்று நீதிமன்றங்களே சொல்லிவிட்டன. எனவே, பெரும்பான்மை அடைபடையில் ஜனநாயகம் என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்திவிட்டது.
(பொண்னுயன் ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்)
அந்த ஆடியோவை பொன்னையனே மறுத்துள்ளார். இது என் குரல் அல்ல என பொன்னையன் கூறியதை நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை அவர் ஆடியோவில் உள்ளது போல் அப்படியே சொல்லி இருந்தாலும் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. காரணம், அவரின் வயது காரணமாக இந்த விவகாரத்தில் நான் கருத்துக் கூற விரும்பவில்லை.
‘இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்படி புனித தலமோ, கிறிஸ்தவர்கள் ரோம் எப்படி புனித தலமோ, இந்துக்களுக்கு பழனி, திருப்பதி, திருச்செந்தூர் எப்படி புனித தலமோ அதே போல ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை ஒரு கோவில்!’
தான் கூட்டிய பொதுக்குழுவையே நடத்த கூடாது என போலீசில் ஒ.பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார். இது போன்ற நிகழ்வு எங்கும், எந்த கட்சியிலும் நடந்ததில்லை. ஒரு கட்சிக்குள் பிளவு வரலாம்! அடித்து கொள்ளலாம்! வெட்டி கொள்ளலாம்! பின்னர் சேர்ந்துகொள்ளலாம் . இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அதிமுகவில் ஏற்கனவே நடந்துள்ளது என்பதால் இது சகஜம் தான்.
மேலும் படிக்க | நான் இருக்கும்வரை அதிமுகவை அழிக்க முடியாது - கோதாவில் குதிக்கும் சசிகலா
ஆனால் ஜானகி அம்மாவின் சொந்த சொத்து, 40 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர், ஜெயலாலிதாவினால் கட்டி காத்த மாளிகை எம்.ஜி.ஆர் மாளிகை. அடிப்படை உறுப்பினர் முதல் மத்திய அமைச்சர் வரை பலரை உருவாக்கிய கட்சி அதிமுக. இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்படி புனித தலமோ, கிறிஸ்தவர்கள் ரோம் எப்படி புனித தலமோ, இந்துக்களுக்கு பழனி, திருப்பதி, திருச்செந்தூர் எப்படி புனித தலமோ அதே போல ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை ஒரு கோவில்.
அதனைக் காலால் எட்டி எட்டி உடைத்ததை எப்படி ஒ.பன்னீர்செல்வம் வேடிக்கை பார்த்தார்? அவரையும் இந்த கட்சி தானே உருவாக்கியது? இந்த செயல் சொந்த தாயை வயிற்றில் அடிப்பதற்க்கு சமம். இந்த செயலால் ஓ.பி.எஸ் நாங்கள் அவர் மீது வைத்து இருந்த கொஞ்சம் மரியாதையும் இழந்து விட்டார். ஒ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்து அலைகிறார் என்பதால் அவரிடம் எந்த நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது’
இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR