டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்க கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை பல பேர் பலியாகி உள்ளனர். அனைத்து கட்சியினரும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பரவிவரும் டெங்கு தொடர்பான வழக்குகளை மீளாய்வு செய்ய 5 உறுப்பினர்கள் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவுடன்; மாநில சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- மத்திய அரசின் மருத்துவ குழுவினர் முதலில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளை ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்வார்கள். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்க கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
5-member team to visit various hospitals in #Chennai. Requested addnl financial assistance of Rs 256 Cr to tackle situation: TN Health Min pic.twitter.com/DLsBJSEcbk
— ANI (@ANI) October 13, 2017