Ration Card Special Camp Latest Updates: தமிழக அரசு சார்பாக நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம் எப்போது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசு சார்பாக நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம் நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் அட்டையின் சிறப்பு
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளையும் பெறலாம்.
ரேஷன் கார்டு அப்டேட்
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் சில நேரங்களில் தங்களுடைய ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டி இருக்கும். புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல் அல்லது உறுப்பினர் பெயர் நீக்குதல் போன்ற மாற்றங்களை செய்ய நினைக்கலாம். அதேநேரத்தில் மொபைல் நம்பர் அப்டேட், பயோமெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்களுக்கும் செய்ய வேண்டி இருக்கும். இதற்காக மக்கள் அங்கும் இங்கும் அலையாமல் இருக்க, ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் சிறந்த நல்ல வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திள்ளது.
ரேஷன் கார்டு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்
ரேஷன் அட்டையில் புதிய அப்டேட்டுகளை செய்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் தங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் மூலம் ரேஷன் கார்டு அப்டேட் செய்வது மட்டுமல்லாமல், ரேஷன் பொருட்கள், ரேஷன் கடை ரேஷன் ஊழியர்கள் தொடர்பான புகார்களையும் பதிவு செய்யலாம்.
சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நவம்பர் 9 ஆம் தேதி
பொது மக்களுக்கான குறை தீர்ப்பு முகாம் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தமிழக அரசு கோரிக்கை
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைத்தீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு தொடர்பான அப்டேட்டுகளை செய்து கொள்வதோடு, தங்களுடைய குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு தமிழக அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பொது விநியோகத் திட்டம்
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் இந்த குறை தீர்ப்பு முகாம்கள், ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதியோர்கள், உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகை
ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மணி கணக்கில் காத்து கிடந்து ரேஷன் பொருட்களை வாங்க முடியாத முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றவருக்கு அங்கீகார சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்பவுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ரேஷன் ஊழியர்கள் செயல்பாடு
ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கான நடத்தப்படும் இந்த சிறப்பு குறை தீர்ப்பு முகாம்களில் ரேஷன் கார்டு, ரேஷன் ரேஷன் கடை, ரேஷன் ஊழியர்கள் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனை குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.
ரேஷன் கடை மோசடி
ரேஷன் கார்டு குறைத்தீர்ப்பு முகாம்களில் ரேஷன் கார்டை ஊழியர்களின் நடவடிக்கை, போன்ற விஷயங்கள் குறித்தும் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - ரேஷன் அட்டை தாரர்களுக்கு மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ் - கேஒய்சி அப்டேட் பண்ணுங்க
மேலும் படிக்க - போலியாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை.. அரசு போட்ட ஒரே கண்டிஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ