நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது!
கடந்த டிச., 21 ஆம் நாள் நடைப்பெற்ற இந்த இடைத்தேர்தலில் 1,76,885 வாக்குகள் பதிவாகின. இன்று (டிச., 24) காலை 8.00 மணியளவில் இந்த வாக்குகளின் எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பம் முதலே சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது 40707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றிப் பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவில் பிரதான கட்சிகளான திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் டெப்பாசிட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது!
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி – தி.மு.கவிற்கானது அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தின் இமாலயத் தோல்வி. தாராளமானதும் ஏராளமானதுமாக பணம் கொடுப்பது, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். #RKNagarElectionResult
— M.K.Stalin (@mkstalin) December 24, 2017
"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி – தி.மு.க-விற்கானது அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தின் இமாலயத் தோல்வி. தாராளமானதும் ஏராளமானதுமாக பணம் கொடுப்பது, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்!