தாழ்வாக சென்ற மின்கம்பியை பிடித்த பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பகுதியில் வுட்பிரயர் தனியார் தேயிலை தோட்டம் செயல்பட்டு வருகிறது.
வனத்தை ஒட்டியுள்ள இந்த தேயிலைத் தோட்டத்தில் 5 காட்டு யானைகள் வழக்கமாக சுற்றி வருகின்றன. இந்த தேயிலை தோட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் வழியாக குடியிருப்புகளுக்கு மின்கம்பி செல்கிறது.
இன்று அதிகாலை கோயில் பகுதிக்கு வந்த காட்டு யானை கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டு உள்ளது. அப்போது கோவில் முன்புள்ள அரச மரத்தில் உள்ள இலைகளை உடைத்துத் தின்ன பெண் யானை ஒன்று முற்பட்டு இருக்கிறது.
அப்போது கிளையை ஒட்டி சென்ற மின்கம்பியில் சிக்கி பெண் யானை சம்பவ இடத்திலேயே உயரிழந்திருக்கிறது.
7:00 மணி அளவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யானை இறந்தது கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் யானை விபத்துக்குள்ளாகி இருந்த மின் கம்பி செல்லும் பாதையை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
மின் கம்பியால் மின்சாரம் தாக்கி பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (2022 மே 20)
மேலும் படிக்க | தந்தையை துண்டு துண்டாக வெட்டி குழித்தோண்டி புதைத்த மகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR