TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிப்பு என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!

Last Updated : Apr 5, 2019, 12:18 PM IST
TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!! title=

TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிப்பு என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!

சென்னை: தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'TET' எனும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'TET' எனும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நிகழாண்டுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி, 28 ஆம் தேதி அறிவித்திருந்தது.  இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 15 முதல் பெறப்பட்டன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இணையதளம் சரிவர வேலைசெய்யாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்திருந்த. இதை தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  மேலும், தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News