சென்னை: கந்தர் சஷ்டி கவசம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளத்தில் தூண்டும் வகையிலான உரையை அளித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் வேலு பிரபாகரனை (Velu Prabhakaran) மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பாரத் முன்னானியைச் சேர்ந்த கே.எஸ்.சிவாஜி அளித்த புகாரின் அடிப்படையில், பிரபாகரனை மதுரவாயிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய குற்றப் பிரிவின் (IPC) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலு பிரபாகரன் சர்ச்சைக்குரிய கருப் பொருட்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதில் பெயர் பெற்றவர். பெரும்பாலும் நாத்திகத்தை எடுத்துக்காட்டும் கருத்துகள் அவர் படங்களில் இருக்கும்.
ஒரு இணைய போர்ட்டில் "ஆத்திரமூட்டும், தூண்டத்தக்க" உரையை வழங்கியதற்காக திரைப்பட தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும் நடிகருமான வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டதாக சைபர் க்ரைம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ALSO READ: முருகனின் கந்த சஷ்டி சர்ச்சையில் கருப்பர் கூட்டத்திற்கு தண்டனை கிடைக்குமா?
அவர் IPC-யின் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் வகையில் பேசுவது); 153 ஏ (1) (a) (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்); 295 (A) (வேண்டுமென்றே மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்கம் கொண்ட செயல்களை செய்தல்); மற்றும் 505 (1) (b) (பொதுமக்களிடையே அச்சம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எந்தவொரு அறிக்கையையும் உருவாக்குவது, வெளியிடுவது அல்லது பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.