தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு

State Government Employees DA Hike News: அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2024, 04:42 PM IST
  • தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
  • தமிழக அரசு உத்தரவு.
  • அகவிலைப்படி 53% ஆக உயர்ந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு title=

Tamil Nadu State Government Employees DA Hike News: தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு சற்று முன் வெளிவந்தது. அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 

1.7.2024 முதல் 53 சதவீத அகவிலைப்படி

மாநில அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.1931 கோடி கூடுதல் செலவாகும் என்வது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்தது. தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டிஏ -வை 53% ஆக உயர்த்த வேண்டும் என ஒன்றியம் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தீபாவளிக்கு முன் வந்த நல்ல செய்தி

தமிழக அரசு அகவிலப்படியை தீபாவளிக்கு முன்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படிருந்த நிலையில், இன்றே இந்த அறிவிப்பு வந்தது ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகைக்கான செலவுகளில் பணியாளர்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். அகவிலைப்படி 3% அதிகரித்து அதன் மூலம் மொத்த அகவிலைப்படி 53% அதிகரித்துள்ளதால், மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய எற்றம் இருக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News