Gossip Latest Tamil News : டீ மாஸ்டர் வருவதற்கு முன்பே கடைக்கு வந்துவிட்ட குசும்பன் பழைய பேப்பரை எடுத்து படித்துக் கொண்டிருந்தான். மெதுவாக வந்த மாஸ்டர், ‘ என்னப்பா குசும்பா, இவ்வளவு சீக்கிரமாவே வந்துட்ட..! என்ன விஷயம்?’ என கேட்டார். ‘அண்ணே, குடில் கட்சி பக்கம் ஏதோ சலசலப்பாக இருக்கிறதே என போய்ட்டு வந்தேன். அங்க போனா எல்லோரும் நிர்வாகிகள் மீது புகார் வாசிப்பாங்கனு பாத்தா, இயக்குநர் மீதே புகார வாசிச்சிட்டு இருக்காங்க’ என்றான். ’அப்படியா... என்ன சேதி?’ என மாஸ்டர் கேட்க, விலாவரியா சொல்றேன் கடைய தொறந்து டீ போடுங்கனு உரிமையோட கேட்டுட்டு, கதையை சொல்ல ஆரம்பிச்சான் குசும்பன்.
‘அண்ணே, கடந்த வாரம் எல்லாம் குடில் கட்சியில ஒரே களேபரமா இருந்துச்சு. முக்கிய நிர்வாகியோட பெண் விஷயம் அரசியல் தளத்துல சலசலப்பா மாறுன விஷயத்தை உங்க கிட்ட சொன்னேன் இல்ல, அந்த விஷயத்துக்கு காரணமான குடில் கட்சி சேட்டைக்காரர் மீது பலரும் செம அதிருப்தியில இருக்காங்க. பேசாம, இந்த கட்சிய விட்டுட்டே போய்விடலாம்னு பல மாவட்டத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே நினைச்சிட்டு இருக்காங்க. சில ஏரியாக்களில் கட்சி தலைமைக்கே தெரியாம, சங்கத்தை கலைச்சிட்டோம் பரமா.. என கூண்டோட குடில் கட்சியில் இருந்து விலகிட்டாங்க. இதெல்லாம் கவனிச்ச முக்கிய நிர்வாகிகள் இப்போ பதறிப்போய் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருங்காங்க.
போறதுன்னு முடிவு பண்ணிட்டோம், அதனால கடைசியா ஒரு தடவை அண்ணன் கிட்ட இதைப் பத்தி பேசிட்டு, அவரு என்ன சொல்றாருன்னு பாத்துட்டு போலாம்னு சில பேர் இருந்திருக்காங்க. அவங்க தங்களோட அண்ணன தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சபோது தான், தொடர்பு எல்லைக்கு அப்பால இயக்குநரு போய் இருக்கிறாருன்னு தெரிஞ்சிருக்கு. முக்கிய நடிகரோட படத்தில அண்ணன் நடிக்கிறாராம். அதற்கு சூட்டிங் போய் இருக்கிறாருன்னு தெரிய வந்திருக்கு. இதைக் கேட்டு கடுப்பான நிர்வாகிகள், இனி அவர நம்புனா சர்வநாசமாயிடும்னு முடிவு பண்ணி, கூடாரத்த காலி பண்ணிட்டோம்னு, இனி எங்கள யாரும் தொடர்பு கொள்ளாதீங்கனு குடில் கட்சிக்கு மெசேஜ்ச மட்டும் போட்டுவிட்டுருக்காங்க.
அதுமட்டுமா, மேடைக்கு மேடை சினிமாகாரனுக்கு நாடாள என்ன தகுதி இருக்குன்னு கேட்டுட்டு, இப்ப இவரே சினிமால நடிக்கிறாரே? என சில நிர்வாகிகள் முனுமுனுத்திருக்கிறார்கள். இவரும் ஒரு இயக்குநர் தான் என தெரிஞ்சாலும், சூப்பரா பேசறாப்ள நிச்சயம் ஏதாவது செய்வாருப்பா என இயக்குநர் மேடையில கதைவசனமா அடிச்சதக்கூட நம்பி இருந்தவங்களும் இப்போ இவரு சினிமால நடிக்கிற விஷயத்தை கேள்விபட்டு எங்கையோ இடிக்குதே என நொச்சுக்கொட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம். அதனால் அண்ணன் வர்றதுக்குள்ள பாதி கூடாரம் காலியாகிடுபோல இருக்குன்னு இன்னும் தீவிர விசுவாசிகளாக இருக்கும் சிலர் வருத்தப்படுறாங்களாம். சேட்டைக்காரர் மேல புகார் வாசிக்க போனா, கடைசியில இயக்குநர் மேல புகார் வாசிக்கிற நிலைமை நமக்கு வந்துருச்சேனு, குடில் கட்சியில் இருந்து விலகிய சிலர் டீ கடையில் காமெடியா பேசிட்டு இருக்கிறாங்க." என சுவாரஸ்யமான கதையை சொல்லிவிட்டு, டீ மாஸ்டருக்கு சலாம் போட்டுவிட்டு கிளம்பினான் குசும்பன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ