Online Rummy Ban Bill: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

Online Rummy Ban In Tamil Nadu: 2வது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 05:12 PM IST
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல்
  • தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார்
  • ஆன்லைன் ரம்மி விளையாடுவது சட்டவிரோதம்
Online Rummy Ban Bill: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் title=

ஆன்லைன் ரம்மி மசோதா

ஆன்லைன் ரம்மி விளையாடி தமிழகம் முழுவதும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை தடை செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆதரவுடன் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த அவர், 130 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மசோதாவில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். 

மேலும் படிக்க | ’கல்விட்டு எறியமாட்டோம் ஆனால்...’ஆளுநர் ஆர்என் ரவிக்கு துரைமுருகன் கடும் எச்சரிக்கை

காலம் தாழ்திய ஆளுநர்

மேலும், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளிக்கும்போது மாநில சட்டமன்றங்களே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய அதிகாரம் இருப்பதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, அளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்றால் அது நிராகரிக்கப்பட்டதாக பொருள் என அண்மையில் பேசியிருந்தார்.

தமிழக அரசு கண்டிப்பு

அவரின் இந்தப் பேச்சு தமிழக அரசுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அதில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். முதலமைசர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்ததுடன், சட்டப்பேரவை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என தெரிவித்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

ஆன்லைன் ரம்மி சட்டம்

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது சட்டவிரோதம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 3 மாதங்கள் சிறை தண்டனையும் கொடுக்கப்படும். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் பட்டியலில் ஆன்லைன் ரம்மி இணைந்துள்ளது. 

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News