மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார்!
தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தனித் தனியே இன்று வெளியிடப்பட்டது.பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டார்.
அதேபோன்று, எம்.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.
மருத்துவ படிப்புக்கான தரவரிசைப்பட்டியலில் 676 மதிப்பெண் பெற்று சென்னை மாணவி கீர்த்தனா முதலிடத்தில் உள்ளார்.