9 மாவட்டங்களில் மது கடைகளுக்கு விடுமுறை!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 01:55 PM IST
9 மாவட்டங்களில் மது கடைகளுக்கு விடுமுறை!  title=

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் 09.10.2021ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குபதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07.10.2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரை வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மேற்படி பகுதிகளுக்கு அருகில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதுகடை மற்றும் மதுபான கூடம் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட தமிழக அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

tasmac

அதன்படி மேலே குறிப்பிட்ட நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் அதன் அருகில் உள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகளில்  பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கடைகள் மற்றும் மதுகூடங்களை மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கவும், மது எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: செல்லூர் ராஜு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News