Tamil Nadu School Students Monthly Scholarship: சென்னை ஐஐடி வளாகத்தில் 'அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் 250 அரசு பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' திட்டம் குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், இந்த புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் 11, 12ஆம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் இந்த மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியை தொடரும்போதும் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்“அனைவருக்கும் IITM” திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார்.
1/3 pic.twitter.com/I6zM51jo6c— TN DIPR (@TNDIPRNEWS) April 5, 2023
மேலும் படிக்க | திமுகவின் திட்டங்களால் கல்வித்துறையின் முன்னேற்றங்கள் - புட்டு புட்டு வைத்த பிடிஆர்!
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி ஐஐடியின் இயக்குனர் காமகோடி பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
ஐஐடிஎம் திட்டம்
சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக ஒரு லட்சம் மாணவர்கள் பயன் தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை பள்ளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.
"முதலமைச்சரின் திறனறித் தேர்வு திட்டம்"#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @Anbil_Mahesh @tnschoolsedu pic.twitter.com/7g1jGxIO3M
— TN DIPR (@TNDIPRNEWS) April 5, 2023
அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்க உள்ள பயிற்சி முடித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் சென்னை ஐஐடிக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் முதன்மை நிறுவனமான சென்னை ஐஐடி கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக அந்நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தி வரும் திட்டம் தான் அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டமாகும்.
ஆசிரியர், மாணவர்களின் கருத்து!
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு இது போன்ற தொழில்நுட்பங்களை கற்பிக்கும் போது உயர் கல்விக்கு அவர்களுக்கு இது மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் இது போன்ற தொழில்நுட்பங்களை பள்ளிகளிலேயே கற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது தங்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ