Armstrong Murder Case Latest News Updates: வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் மூலமாகவே சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அனைவரையும் ஒருங்கிணைத்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அவரது செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். மொட்டை கிருஷ்ணன் கடந்த மே மாதம் அடையாறில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்ததும் அங்கிருந்து சில வீடுகளுக்கு சென்று வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக அடையாறில் சம்போ செந்தில் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தங்கும் விடுதிகள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்ட் பணியாளர்களிடம் அவரது புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணன், சிங்கப்பூரில் இருந்து தப்பி தற்போது சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிருஷ்ணனை பிடித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம் மற்றும் சம்போ செந்தில் இருப்பிடம் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்து
உள்ளனர்.
சிக்கலில் நெல்சன் - மோனிஷா
முன்னதாக, மொட்டை கிருஷ்ணன், பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷாவிடம் பல முறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டு, மோனிஷா போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார்.
விசாரணையில், தான் ஒரு வழக்கறிஞர் என்பதால் வழக்கு தொடர்பாகவே மொட்டை கிருஷ்ணனிடம் பேசியதாக மோனிஷா போலீசாரிடம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் முன் மோனிஷா - நெல்சனின் வீட்டில்தான் தஞ்சம் அடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது உறுதியாகும்பட்சத்தில் போலீசாரின் விசாரணை வளையத்தில் இயக்குநர் நெல்சனும் வருவார் என தகவல்கள் கூறப்படுகின்றன.
நெல்சன் மனைவி அனுப்பிய ரூ.75 லட்சம்
இந்நிலையில், இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்ச ரூபாய் மொட்டை கிருஷ்ணனுக்கு கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா எனவும் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்போ செந்திலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது மொட்டை கிருஷ்ணனுக்கு நான் எவ்வித பணம் பரிவர்த்தனை செய்யவில்லை என இயக்குனர் நென்சிலின் மனைவி மோனிஷா அவரது வழக்கறிஞர் மூலம் தெரிவித்து இருக்கிறார். ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திரைவாழ்வில் நெல்சனுக்கு பாதிப்பு...?
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளுக்கு இயக்குநராக இருந்த நெல்சன், 2016இல் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை தொடங்கினார். இருப்பினும் அந்த திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், 2018இல் கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி, அடுத்த சிவகார்த்திகேயன் உடன் டாக்டர், விஜய் உடன் பீஸ்ட், ரஜினி உடன் ஜெயிலர் என அடுத்தடுத்து உச்ச நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் பீஸ்ட் மட்டுமே சற்று விமர்சன ரீதியில் தோல்வியடைந்த படமாகும்.
மற்ற அனைத்து படங்களும், குறிப்பாக கடைசியாக வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நெல்சனை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் இயக்குநர் நெல்சன் தற்போதுதான் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கிறார். அடுத்து அவர் மீண்டும் ரஜினியுடன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் - மோனிஷா பெயர் அடிப்படுவது அவரது திரைவாழ்வில் பெரும் கரும்புள்ளியாக அமையலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஆவின் தொழிற்சாலையில் சோகம்! ஷால் சிக்கியதால் இளம் பெண்ணின் தலை துண்டானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ