சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி
ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அப்போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் அணிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 15 காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட ஆணையிட்டுள்ளார். அவர்களின் பட்டியல் விவரம் இதோ:-
1. எஸ்.பி.லாவண்யா,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
சென்னை.
2. எஸ்.நமசிவாயம்,
துணை காவல் கண்காணிப்பாளர்,
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை,
மதுரை.
3. பெ.உலகநாதன்,
காவல் ஆய்வாளர்,
கம்பம் வடக்கு காவல் நிலையம்,
தேனி மாவட்டம்.
4. கு.கிருஷ்ணமூர்த்தி,
காவல் ஆய்வாளர்,
வி-7 நொளம்பூர் காவல் நிலையம்,
சென்னை பெருநகர காவல்.
5. எம்.சரவணன்,
காவல் ஆய்வாளர்,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,
நாகப்பட்டினம் மாவட்டம்.
6. எம்.கிளாஸ்டின் டேவிட்,
காவல் ஆய்வாளர்,
மத்திய குற்றப்பிரிவு,
சென்னை பெருநகர காவல்.
7. ஜெ.மகேஷ்குமார்,
காவல் ஆய்வாளர்,
பி-3 தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம்,
மதுரை மாநகர்.
8. ப்பி.சித்ராதேவி,
காவல் ஆய்வாளர்,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,
தேனி மாவட்டம்.
9. ஜெ.ஜெயந்தி,
காவல் ஆய்வாளர்,
இருப்புப் பாதை காவல் நிலையம்,
ஜோலார்பேட்டை.
10. ஆர்.சுரேந்தர்,
காவல் உதவி ஆய்வாளர்,
கண்டோன்மென்ட் காவல் நிலையம்,
திருச்சி மாநகரம்.
இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதலமைச்சர்
ஆணையிட்டுள்ளார். அவர்களின் பட்டியல் விவரம் இதோ:-
1. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப.,
காவல் ஆணையர்,
மதுரை மாநகரம்,
தற்போது காவல்துறை தலைவர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு த் துறை,
சென்னை.
2. செல்வி ஜா.முத்தரசி,
காவல் துறை உதவி தலைவர், (நிர்வாகம்),
காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,
சென்னை.
3. தெ.கண்ணன்,
காவல் கண்காணிப்பாளர்,
தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
சென்னை.
4. த. ராஜ்நாராயணன்,
காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்)
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை,
அயல் பணி இயக்குநர் அலுவலகம்,
சென்னை.
5. வி.ஆனந்தராஜன்,
காவல் உதவி ஆய்வாளர்,
திட்டச்சேரி காவல் நிலையம்,
அயல்பணி , நாகப்பட்டினம் மாவட்ட தனிப்பிரிவு.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.