கர்நாடகாவிற்கு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க சென்றதால் தான் கர்நாடகா தேர்தலில் பிஜேபி தோல்வியடைந்தார்கள், அதேபோன்று தமிழகத்துக்கும் மோடி வர உள்ளதால் கண்டிப்பாக 40 தொகுதியிலும் வெற்றி நமக்குத்தான் என ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார். சென்னை திருவெற்றியூர் பகுதியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ஏழை எளியோருக்கு தையல் இயந்திரம் மற்றும் மாணவருக்கு லேப்டாப் உள்ளிட்ட ஆயிரம் பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அரசு கொறடா கோவி செழியன், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வைமா அருள்தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்தும் அவற்றின் நன்மைகள் குறித்தும் விளக்கமும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது குறித்தும் மேடையில் பேசினார். இதில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, பிஜேபி வரலாறு தெரியாமல் பேசுகிறது. 1962ல் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் திமுக வளர்ந்து விடும் என்ற நோக்கத்தில் அன்றே மத்திய அரசு தடை சட்டத்தை கொண்டு வந்ததாகவும் 153 ஏ என்ற பிரிவை திமுக விற்காகவே கொண்டு வந்தனர். திமுகவை தடை செய்ய நினைத்தார்கள் அந்த தடையும் மீறி வளர்ந்த இயக்கம் திமுக என்றும் மோடி மறந்துவிடக்கூடாது என தெரிவித்தார். இதேபோன்று எமர்ஜென்சி நேரத்தில் திமுகவை அழிக்க வேண்டும் என்று அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் ஏதேதோ செய்து பார்த்தார்கள். அனைத்தையும் நாங்கள் சந்தித்தோம்.
பாரதப் பிரதமர் மோடி திமுகவை அழிப்பேன் என்று பேசுகிறார், எமர்ஜென்சி நேரத்தில் நீங்கள் எங்கே போயிருக்கிறீர்கள்? எமர்ஜென்சி நேரத்தில் அகில இந்திய கட்சிகளை அனைத்தையும் கலைத்து விட்டார்கள் எனவும் பிஜேபியின் ஒரிஜினல் நேம் ஜன சங்கம் அவர்கள் சின்னம் விளக்கு எமர்ஜென்சி நேரத்தில் ஜனசங்கத்தை கலைத்தவர்கள் பிஜேபி இதே போன்று எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது அண்ணா திமுக என்று ஆரம்பித்ததாகவும் பின்னர் அனைத்து இந்திய அண்ணா திமுக என்று மாற்றியதாகவும் எமர்ஜென்சி நேரத்தில் திமுகவின் கருத்து சிகப்பு கொடியையும் திமுக என்ற பெயரையும் மாற்ற மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி எனவும் இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது.
1957 இல் உதயசூரியின் சின்னத்தில் நின்றதாகவும் அன்று முதல் இன்று வரை ஒரே சின்னத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கட்சி திமுக வேறு எந்த கட்சியும் கிடையாது/ காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எல்லாம் சின்னத்தை மாற்றி இருந்த நிலையில் இதுவரை உதய சூரியன் சின்னத்தை இதுவரை திமுக மாற்றவில்லை எனவும் அதிமுக வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் இருக்கும் என்பதே தெரியவில்லை என கிண்டல் அடித்தார். நரேந்திர மோடி தூத்துக்குடி பக்கம் செல்ல முடியாது எனவும் அதனால்தான் சென்னை பக்கம் திரும்புகிறார், திமுக கடைகோடி தோண்டனை உன்னால் இழுக்க முடியாது திமுக தொண்டன் பதவியை எதிர்பார்த்து கிடையாது கொள்கைக்காக வாழ்ந்தவன் என தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி 300 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும், மோடியால் வர முடியாது என்ற வைத்தெறுச்சளில் தான் திமுக மீது பாய்கிறார் பாய பாய நமக்கு லாபம் தமிழ்நாட்டில் தான் முதல் தேர்தல் நடக்கப் போகிறது. கர்நாடகாவில் மோடி தெரு தெருவாக போய் ஆண்டு கொண்டு இருந்த பிஜேபியை தோல்வியடைய செய்துவிட்டார். அதேபோன்று தமிழ்நாடு பக்கம் திரும்பி உள்ளார், தமிழ்நாட்டில் வேட்பாளர் யார் என பார்க்காமல் தளபதி என்ற எண்ணத்தோடு வாக்கு செலுத்த வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் முதல்வர் சிரிப்பது கூட கிடையாது உழைத்தவர்களுக்கு எல்லாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்து கஷ்டப்பட்டார்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எல்லாம் பங்கேற்றார்கள் உழைத்தார்கள். ஆனால் அத்தனை பேருக்கும் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தில்தான் முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார். இந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என மேடையில் பேசினார்.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு செல்லும் டிடிவி தினகரன் - இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ