ராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வருகிற மே 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ராமநாதபுரத்தை அடுத்த பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இதில், தமிழகத்திலுள்ள முக்கியமான நகரங்களில் இருந்து தலைசிறந்த 800 காளைகள் பங்கேற்க இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்காக பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு வாடிவாசல் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஹோட்டல் நடத்தி வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்
வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.500 லஞ்சம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR