ஓபிஎஸ் நேரில் வருகை
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், போட்டியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டுகளித்தார். அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் திறக்கப்பட்ட கருணாநிதி ஸ்டேண்டில் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். அப்போது அவருடன் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் போட்டியை பார்த்து ரசித்தார்.
ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு
— DJayakumar (@offiofDJ) May 6, 2023
போட்டியின் இடையே ஓ. பன்னீர் செல்வமும், சபரீசனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இருவரும் பரஸ்பரம் உடல் நலம் விசாரித்துக் கொண்டவர்கள் அரசியல் கடந்து சிறிதுநேரம் உரையாடியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பல்வேறு கோணங்களில் அணுகப்படுகிறது. ஓபிஎஸ் பின்னணியில் ஏற்கனவே திமுக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அணி குற்றம்சாட்டி வந்த நிலையில், இப்போது ஓபிஎஸ் சபரீசனை சந்தித்திருப்பது அதனை ஊர்ஜிதப்படுத்துவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.
ஜெயக்குமார் ட்வீட்
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சபரீசன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின் புகைப்படத்தை பகிர்ந்து பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், தோனிக்கு பதிலாக தன்னை சிஎஸ்கே கேப்டனாக அறிவிக்கும்படி சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் சிஸ்கே நிர்வாகத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும் ஓபிஎஸ் பின்னணியில் திமுக இருப்பது இப்போது அம்பலப்பட்டிருப்பதாகவும், ஓபிஎஸ் அதிமுகவுக்கு தொடர்ந்து துரோகம் செய்தது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஓபிஎஸ் நிலைப்பாடு
அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு ஓபிஎஸ் சட்டப்போராட்டம் நடத்தி வரும் அதேவேளையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்ற யோசனையிலும் இருக்கிறார் அவர். குறிப்பாக தன்னுடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இப்போது தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில், அவரை எந்த கட்சி சார்பில் களமிறக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறார். பாஜகவில் சேருமாறு டெல்லி அழுத்தம் கொடுப்பதாகவும், ஆனால் அதற்கு ஓபிஎஸ்ஸூக்கு சம்மதம் இல்லை என கூறப்படுகிறது. திமுகவில் ரவீந்திரநாத் இணைவது குறித்த ஆலோசனையும் இப்போது இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவதால், அது சார்ந்த சந்திப்பாக கூட இருக்கலாம் என எடப்பாடி அணியினர் கொளுத்தி போட்டுள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியாவெங்கும் சமூக நீதி... முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த முக்கிய மாநாடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ