ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? ஜெயக்குமார் விளக்கம்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் எழுந்தது என தகவல் வெளியான சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

Last Updated : Apr 7, 2022, 12:04 PM IST
  • அதிமுக கூட்டத்தில் மோதல்
  • ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மோதல்
  • அதிமுக ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? ஜெயக்குமார் விளக்கம் title=

சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அதன் பிறகு சைலெண்ட் மோடுக்கு சென்ற சசிகலா சில மாதங்களுக்கு பிறகு ஆக்டிவ் மோடுக்கு மாறிய அவர் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களையும், அதிமுக தொண்டர்களையும் சந்தித்தார்.

குறிப்பாக அதிமுக கொடி கட்டிய காரில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம் அதிமுக கட்சிக்குள் அவரது அடுத்த ரவுண்டுக்கான அச்சாரமாக பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது தொடர்பாக பேச்சுக்கள் எழுந்த சமயத்தில் ஓபிஎஸ் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதில் கறாராக இருக்கிறார்.

epsops

இதற்கிடையே சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டுமென தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். அதுமட்டுமின்றி ஓபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு முழுமையாக ஓரங்கட்டுகிறதென பேச்சுக்கள் எழுந்தன.

மேலும் படிக்க | ப்ரீ பயர் விளையாட்டால் வந்த வினை: மயக்க நிலையில் சிறுவன் செய்த செயல்!

நிலைமை இப்படி இருக்க அதிமுக அமைப்பு தேர்தலின் அடுத்தக் கட்டத்தை நடத்துவது தொடர்பாகவும், செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Admk Meeting

கூட்டத்தில், கட்சி நலனுக்காக சில மாவட்ட செயலாளர்களை நீக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியதாகவும், அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேச ஓபிஎஸ் தரப்புக்கும், ஈபிஎஸ் தரப்புக்கும் மோதல் எழுந்ததாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு கூறியது. அதற்கு ஈபிஎஸ் தரப்பு கடுமையாக மறுத்தது. இதன் காரணமாகவும் மோதல் நீடித்தது எனவும் கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து தகவல் கசிந்தது.

மேலும் படிக்க | அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு - பாதியில் வெளியேறிய வைத்தியலிங்கம்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் “ கட்சியின் வளர்ச்சி குறித்தே ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகளுக்கு மத்தியில் எந்தவித மோதலும் எழவில்லை. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியில் இல்லாதவர் குறித்து விவாதித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய எந்த அவசியமும் அதிமுகவுக்கு இல்லை” என கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News