பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர்

பள்ளி மாணவ மாணவிகளை  கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது-போக்குவரத்து துறை அமைச்சர், எஸ்.எஸ்.சிவசங்கர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 10, 2024, 09:03 PM IST
  • பள்ளிகள் திறக்கப்பட்டன
  • மாணவ-மாணவிகள் இலவசமாக பயணிக்கலாம்
  • பள்ளி சீறுடை அவசியம்!
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் title=

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரையில் சீருடையுடன் பேருந்துகளில் வரும் பள்ளி மாணவ மாணவிகளை  கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது‌. 

இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு  உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.‌எஸ்‌.சிவசங்கர்.,

தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் புதிய இலவச பேருந்து அட்டை (பஸ் பாஸ்) வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் அல்லது சீருடையில் வரும் மாணவ மாணவிகளை பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!

எனவே மாணவ மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வரலாம் எனவும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ- மாணவியர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில் புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்டு வருவதை போன்று தமிழக முழுவதும் இயக்கப்பட்டு வரும்  பழைய பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்  பேருந்து வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் பெயர் பலகை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உலக வங்கி நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது

பிரிசாத்த முறையில் இத்திட்டம் சென்னையில் முதற்கட்டமாக 3000 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிப் பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் தமிழக முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரசு பேருந்துகளில் UPIமுறையில் பேருந்து கட்டணம் வசூலிக்கும் முறை சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சென்னையில் தனியார் உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து நபர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News