மதுரை : ரூ.3 கோடி மதிப்புடைய திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது

மதுரை அருகே சுமார் ரூ.3 கோடி மதிப்புடைய திமிங்கலத்தின் எச்சத்தை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2022, 06:29 PM IST
  • மதுரை அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் கடத்தல்
  • மூன்று பேர் கைது, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
மதுரை : ரூ.3 கோடி மதிப்புடைய திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது  title=

சுமார் ரூ.3 கோடி மதிப்புடைய திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக மதுரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடத்தது. உடனடியாக உதவி ஆய்வாளர் நாகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டது. மேலூர் - சிவகங்கை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டத்தில் காரின் உள்ளே திமிங்கலத்தின் எச்சம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடியாகும். இதனயடுத்து திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்த போலீசார் பழனிசாமி, அழகு, குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. விலை மதிப்பு மிக்க திமிங்கலத்தின் எச்சம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? இதனை யாரிடம் விற்பனை செய்ய முயற்சி செய்தார்கள்? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Madurai

திமிங்கலத்தின் எச்சம் அல்லது வாந்திக்கு அம்பர்கிரிஸ் என பெயர். கடலில் உள்ள பீலிக் கணவாய் போன்ற கடினமான ஓடுகளை கொண்ட மீன்களை திமிங்கலங்கள் வேட்டையாடி உண்ணும். அப்போது இந்த ஓடுகள் திமிங்கலங்களுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் திமிங்கலத்தின் வயிற்றில் இந்த ஓட்டை சுற்றி ஒருவிதமான திரவம் உற்பத்தி ஆகிறது. இதனையே அம்பர்கிரிஸ் என்கிறார்கள். 

மேலும் படிக்க | Whale Ambergris: வைரத்தை விட மிக மதிப்பு மிக்கது திமிங்கிலத்தின் வாந்தி..!!!

file photo

இந்த அம்பர்கிரிஸ் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடலின் மேற்பரப்பில் மிதந்து வரும் அம்பர்கிரிஸ் மீது சூரிய ஒளி பட்டு இதனை கடினமான பொருளாக மாற்றுகிறது. 

ambergris

முதலில் அம்பர்கிரிஸ் கெட்ட நாற்றத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். பின்னர் நாட்கள் செல்ல செல்ல உலர்ந்து பிறகு நறுமணமாக மாறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு விதிகளின்படி அம்பர்கிரிஸ் போன்ற கடலில் இருந்து கிடைக்கும் அரியவகை பொருட்கள் மற்றும் எச்சங்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் தண்டனைக்குறிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திமிங்கலத்தின் எச்சத்தை கடத்திய மும்பை நபர் கைது...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News