53 ஆண்டு காலம் நான் கலைஞரோடு இருந்தவன் ஆனால் அந்த இமயத்தின் இடுக்கே எனக்கு தெரியாது. அடிமுடி காண அண்ணாமலை மாறி கலைஞர் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். தமிழியக்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "கலைஞர் நூற்றாண்டு நிறைவு" விழாவில் எம்.பி கனிமொழி, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர் காந்தி கவிஞர் வைரமுத்து, முரசொலி செல்வம் விஐடி தனியார் பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜிவி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க | அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்
இவ்விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முரசொலி செல்வமும், விசுவநாதனும் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன். என்னை செதுக்கியவர்கள் இவர்கள். இரக்கம் உள்ளவர் கலைஞர் என்றைக்கும் யாரையும் மறக்காதவர். ஒரு தலைவன், தொண்டன் இருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு கலைஞர் தான் உதாரணம். 53 ஆண்டு காலம் நான் கலைஞரோடு இருந்தவன், ஆனால் அந்த இமயத்தின் இடுக்கே எனக்கு தெரியாது. அடிமுடி காண அண்ணாமலை மாறி கலைஞர் என பேசினார்.
இவ்விழாவில் எம்.பி கனிமொழி பேசுகையில், எனக்கு வழிகாட்டி, தத்துவவாதியாக இருந்தவர் எனது தந்தை கலைஞர். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கூட டென்சன் ஆகாதவர். எதற்க்குமே தளர்ந்து போய் நான் பார்த்தது இல்லை. அது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். "ஒரு முதலமைச்சரா இருத்தவர் கைது செய்து ஒவ்வொரு காவல் நிலையமா அலைய வைத்து, விடிய விடிய மத்திய சிறை முன் காக்க வைக்கப்பட்டவர். நான் கேட்ட போது, கலைஞரை வேலூர் சிறைக்கு அழைத்து போவதாக கூறியதாக தகவல் வந்து. ஒரு போராளியாக தரையில் அமர்ந்து வா பார்த்துக்கொள்ளலாம் என வாழ்க்கை முழுவதும் போராடி போராடி தான் மறைந்த பிறகும் தன்னை அடக்கம் செய்யும் இடத்தையும் போராடி பெற்றவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்"
மாற்றுத்திறனாளி வாக்குகள் ஒன்று தேர்லை நிர்ணயிப்பது அல்ல. ஆனாலும் அவர்களின் போராட்டத்தின் போது காத்திருந்து குறைகளை கேட்டு 10 நிமிடத்தில் தீர்த்து வைத்தவர் கலைஞர். சமூகத்தால் குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவருக்கு திருநங்கை என பெயர் வைத்து அவர்களுக்கு அனைத்து அங்கிகாரத்தையும் இந்தியாவிலேயே முதல் முறையாக பெற்றுத்தந்தவர் கலைஞர் மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களை எந்த காலத்திலும் விட்டுக்கொடுப்பது இல்லை. மன்னித்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய மனம் படைத்தவர் கலைஞர் என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ