குற்றால அருவியில் இரவு நேர குளியல்; சுற்றுலா பயணிகள் குஷி

குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 26, 2022, 09:17 AM IST
  • குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
  • பூங்காக்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தன
  • மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்
குற்றால அருவியில் இரவு நேர குளியல்; சுற்றுலா பயணிகள் குஷி title=

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சீசன் நேரத்தில் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்...ஆளுநருக்கு தமிழக அரசின் செக்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது. தற்போது கடுமையான வெயில் அடித்து வருகிறது. எனினும் ஏற்கனவே பெய்த மழையினால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இருந்ததால் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. மெயின் அருவியில் மிகவும் குறைவாகவும், ஐந்தருவியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகமாக விழுகிறது.

குற்றால அருவிகளில் இரவு நேரத்திலும் குளிக்க அனுமதிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் இன்று 25ஆம் தேதி முதல் இரவில் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் இரவு நேரத்தில் குளித்து மகிழ்ந்தனர். அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைவான அளவு தண்ணீர் விழுந்தது. 

அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு திமுகவினர் மற்றும் அதிமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

(கே எஸ் கணேசன் தென்காசி மாவட்ட செய்தியாளர்)

மேலும் படிக்க | காதல் மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News