சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்ததில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் விவரங்களை மண்டல வாரியாக பிரித்து வெளியிட்டுள்ளது கிரேட்டர் சென்னை கார்பரேசன்.
READ | சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ICMR...
இந்த பட்டியலின் படி கோடம்பாக்கத்தில் - 2737, அண்ணா நகர் - 2398, தேனாம்பேட்டை-2222 , ராயபுரம் - 2320, தண்டையார்பேட்டை-2227, திரு.வி.க. நகர்- 1775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Here's the Info Graphic summary of Covid-19 cases in Chennai. #Covid19Chennai #GCC #Chennai #chennaicorporation pic.twitter.com/rSbccPWGTM
— Greater Chennai Corporation (@chennaicorp) July 5, 2020
இதனிடையே சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு பட்டியல் படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் 26 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
READ | தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா... மொத்த பாதிப்பு 1,07,001 ஆக உயர்வு..!
தற்போதைய நிலவரப்படி சென்னையில் இதுவரை 66,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1033 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்., 41,309 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ள நிலையில், தற்போது 24, 195 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.